79 நிமிடம் இடைவிடாமல் எடுத்த முயற்சி.. உலக சாதனை படைத்த சிறுமி
பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்த சிறுமிக்கு இணையவாசிகள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலக சாதனை
79 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக எல்லையில் தேசத்தைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்போது ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் வந்தே மாதரம் பாடலுக்கு 79 நிமிடம் இடைவிடாது பரதநாட்டியம் ஆடியுள்ளார்.
இந்த விடயம் அங்கிருந்தவர்களுக்கு மாத்திரம் அல்லாது உலகத்திலுள்ளவர்கள் பலரை வியக்க வைத்துள்ளது.
இவ்வளவு சிறிய வயதில் சிறுமி எடுத்த முயற்சியை பாராட்டு வகையில் செவன்த் சென்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் சாதனையாக பதியப்பட்டுள்ளது.
சிறுமி எடுத்த முயற்சி வெற்றி
அதாவது, சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் ஏழு வயது மகள் காவியா என்பவரே இவ்வாறு பரதநாட்டியம் ஆடி, ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
நமது நாட்டின் எல்லைகளைக் காக்கும் துணிச்சலான வீரர்களுக்கு மனமார்ந்த சல்யூட் செலுத்தும் வகையில் குழந்தை காவியா செய்த விடயம், இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பித்துள்ளது.
சரியாக 79 நிமிடங்கள் இடைவிடாது பரதநாட்டியம் ஆடி உலக சாதனையாளராகவும் மாறியுள்ளார். இந்த நடனம் ராணுவ வீரர்களுக்கு பொதுவாக சமர்ப்பணம் கொடுத்தாலும் நாட்டிற்குக் காவல் தெய்வமாக விளங்கக் கூடிய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நிகழ்வு முடிவடைந்துள்ளது.
இது குறித்து பேசிய காவியா, "இந்தியன் ஆர்மி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களைப் பாராட்டுவதற்காக நான் ஆடினேன்" என மழலை குரலில் பேசியுள்ளார். இந்த பதிவு இந்தியர்கள் உட்பட இணையவாசிகள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
