ஏன் இப்படி பண்றீங்கள்...? - 2ம் திருமணம் குறித்து நடிகை மீனா உருக்கம்...!
2ம் திருமணம் குறித்து நடிகை மீனா உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
வித்யாசாகர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
2ம் திருமணம் குறித்து நடிகை மீனா உருக்கம் -
சமீபத்தில் நடிகை மீனாவுக்கு தனியார் சேனல் ஒன்று 40வது பிறந்தநாளையொட்டி விழா எடுத்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் நடிகை மீனா தன் கணவரை நினைத்து கண் கலங்கினார். 2ம் திருணம் குறித்து நடிகை மீனா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,
தன் கணவர் இல்லை என்பதையே தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்றே எனக்கு தெரியவில்லை. தற்போது தன் மகளின் எதிர்காலம் பற்றியும், என் படங்களை தேர்வு செய்வதில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தி வருகிறேன் என்று உருக்கமாக பேசினார்.