ஐடி ஊழியர் விவாகரத்தில் பதுங்கிய நடிகை லட்சுமி மேனன்- நடந்தது என்ன?
கடத்தல் விவாகரத்தில் விசாரணைக்கு அழைத்த போது நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கியத்தில் வெளியான “கும்கி” படத்தில் அறிமுகமாகியவர் தான் லட்சுமி மேனன்.
இதனை தொடர்ந்து சசிகுமார், விஷால், அஜித் என டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இப்படியொரு நிலையில், கல்லூரி படிப்பை முடிப்பதற்காக சினிமா பயணத்திற்கு பிரேக் கொடுத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் இதுவே லட்சுமி மேனனின் மார்க்கட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
சினிமாவிற்குள் ரீ-என்றி கொடுக்கும் விதமாக லாரன்ஸுடன் இணைந்து “சந்திரமுகி - 2” படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தலைமறைவாக இருக்கும் நடிகை
இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான விடுதியில் லட்சுமி மேனன் தரப்பிற்கு ஐடி ஊழியர் தரப்பிற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது மோதல்கள் முற்றிப்போக ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று லட்சுமி மேனன் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த போது, லட்சுமி மேனன் தரப்பினரை விசாரணைக்கு அழைத்த நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் இந்த விவாகரம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

