நடிகை குத்து ரம்யா 40 வயதில் மாரடைப்பால் மரணமா? அதிர்ச்சிக்கு பின்னால் அடங்கிய உண்மை
நடிகை குத்து ரம்யா மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக பரவிய வதந்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக குத்து படத்தில் அறிமுகமானவர் தான் ரம்யா. இப்படத்தின் வெற்றிக்கு பின்பு தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்தது.
பின்பு சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், தனுஷுடன் பொல்லாதவன் படத்திலும், அர்ஜுனுடன் கிரி படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் மட்டுமின்றி கன்னட படங்களிலும் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்தார். கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன், தேர்தலில் தோல்வியை சந்தித்தார். தற்போது திரைப்பட தயாரிப்பு மற்றும் படம் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது 40 வயதாகும் ரம்யா மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.
ஆம் ரம்யா தற்போது ஜெனிவாவில் இருக்கும் நிலையில், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த குழப்பத்திற்கு காரணம், ராஜ்குமார் குடும்பத்தை சேர்ந்த கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா, கடந்த மாதம் 6ம் தேதி காலமானார்.
எனவே அவரை நினைத்து தவறாக திவ்யா ஸ்பந்தனா என நினைத்து சிலர் இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |