உடல் எடை குறைத்து மகளுக்கு இணையான அழகில் குஷ்பூ- அவருக்கு பாடகி போட்ட பதிவு
உடல் எடையை குறைத்து மகள்களுக்கு சவால் விடும் லுக்கில் குஷ்பூ ஆடிய நடனக் காட்சியை பாடகியொருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை குஷ்பூ
குழந்தை நட்சத்திரமாக திரை பயணத்தை துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ.
இவர் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் வந்தவர். முதலில் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் தான் சினிமாவுக்குள் அறிமுகமானார்.
பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் குஷ்புவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல ரீச்சை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இதற்கிடையில் 10 ஆண்டுகளாக இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வரும் குஷ்பூ, அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
பாடகி போட்ட பதிவு
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பூ அவ்வப்போது படங்கள் மற்றும் காணொளிகள் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், குஷ்பூ மகளுடன் ட்ரெண்டிங்கில் உள்ள மியூசிக் ஒன்றிற்கு நடனம் ஆடிய காணொளியை பாடகியொருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பதிவை பார்த்த த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மகளுக்கு இணையான அழகில் இருப்பதால் ரசிகர்கள் காணொளியை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |