22 ஆண்டுக்கு முன்பு குஷ்பு மருத்துவமனையில்: வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி
நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் பிறந்தநாளான இன்று, அதனை கொண்டாடும் விதமாக குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
ஒரு காலத்தில் நடிப்பில் கொடிகட்டிப் பறந்த குஷ்பு தற்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்ததுடன், இவருக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதில் மூத்த மகளான அவந்திகாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அம்மாவைப் போன்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட அவந்திகா சினிமா சம்மந்தமாக படிப்பினை லண்டன் சென்று படித்துவந்த நிலையில் சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை வந்த அவந்திகாவை அவதானித்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். ஆம் உடம்பில் டாட்டூக்களை வரைந்து கொண்டு பயங்கர மாடர்னாக பாலிவுட் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அழகில் அவந்திகா வந்துள்ளார்.
குஷ்பு வெளியிட்ட வைரல் புகைப்படம்
இந்நிலையில் நடிகை குஷ்பு இன்று தனது மகளின் பிறந்தநாளை, அவரை பெற்றெடுத்த தருணத்தில் மருத்துவமனையில் சுந்தர் சி கையில் அவந்திகா முதன்முதலாக குழந்தையாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல் அடுத்தும் சில புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன், தூரத்தில் இருக்கும் உன் மீது நாங்கள் அளவுகடந்த பாசம் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவினை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவின் மகள் மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.