'நான் இதுவரை திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்' நடிகை கோவை சரளாவின் வெளிப்படை பேச்சு!
நகைச்சுவை நடிகை கோவை சரளா தனக்கு 60 வயதிற்கு மேல் ஆகியும் தான் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
கோவை சரளா
தமிழ் சினிமாவில் மனோரம்மாவின் இடத்தை பூர்த்தி செய்த நடிகை என்றால் அது கோவை சரளா என்று தான் சொல்ல முடியும்.
நகைச்சுவை நடிப்பில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய சந்தர்ப்பத்தில் கோவை சரளா அதை முறியடித்து ஒரு பெண் நகைச்சுவை நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.
இவர் நடித்த பல காமெடிகள் இன்றும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத நகைச்சுவையாக உள்ளது. என்னதான் நகைச்சுவை நடிகையாக இருந்தாலும் 15 படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் கோவை சரளா.
இவர் எம்ஜியாரின் தீவிர ரசிகையாவார். இந்த நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு பல வதந்திகள் பரவி வந்த நிலையில் தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என பேட்டி ஒன்றின் போது கூறியுள்ளார்.
அவர் பேசும் போது 'நாம் பிறக்கும் போது தனியாகத்தான் பிறக்கிறோம். அதே போல இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கப்போகிறோம்.
வாழ்க்கையின் இந்த இடைவெளியில் எந்த உறவும் தேவையில்லை என எனக்கு தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைத்தேன்.
இதை விட இன்று திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் கைவிடப்பட்டு தனியாக வாழ்கின்றனர்.
எனக்கு பொதுவாக யாரையும் சார்ந்து வாழ பிடிக்காது அதனால் தான் நான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினார்'.
இப்படி தான் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தை கோவை சரளா அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |