பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு அடையாளம் தெரியாமல் மாறிப்போன தமிழ் நடிகை!
தமிழ் நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் நடிகை போல் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்படுகின்றது. தற்போது இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது பாலிவுட் நடிகைகள் போல் இருக்கின்றார்.
திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
கீர்த்தி சுரேஷ் 90 ஸ் நடிகை மேனகா - சுரேஷ் ஆகியோரின் இளைய மகள் ஆவார். இதன் காரணமாக கீர்த்தி சினிமாவிற்குள் மிக இலகுவாக வந்து விட்டார்.
இவரின் திருமணம் தொடர்பான சில சர்ச்சை கருத்துக்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அதற்கு கீர்த்தி பேட்டியொன்றில், “ எனக்கு திருமணம் என்றால் உங்களுக்கு நானே சொல்கின்றேன்...” என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“மகா நதி” படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |