பிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் கௌசல்யா! அவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
பிரபல நடிகை கௌசல்யா தமிழ் சீரியல் சுந்தரியில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிரடியாக என்ரி கொடுத்துள்ளார்.
நடிகை கௌசல்யா ஒரு காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக தமிழில் வளம் வந்தவர்.
பிறகு அவரை பெரிதாக படங்களில் காணமுடிய வில்லை.
தமிழ் சீரியலில் கௌசல்யாவின் கதாபாத்திரம்
பிறகு தமிழ் சீரியல்களில் நடித்த கௌசல்யா, சில நாட்கள் தோன்றாமல் இருந்தார். தற்பொழுது மீண்டும் சுந்தரி சீரியலில் தோன்றியிருக்கிறார்.
சுந்தரி தொடரில் கலெக்டராக நினைக்கும் நாயகிக்கு கலெக்டராக பயிற்சி அளிக்கும் பயிற்சி அதிகாரியாக கௌசல்யா நடிக்கின்றார்.
சுந்தரி தொடரின் ரசிகர்கள் மட்டும் இன்றி, கௌசல்யாவின் ரசிகர்களும் இந்த சீரியலில் விறுவிறுப்பாக நடக்க போகும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
கௌசல்யாவின் வருகை சீரியலின் கதைக்கும், திரைக்கதைக்கும் பெரிய ஒரு மாற்றத்தினை கொண்டு வந்துள்ளது.