இதுவும் காதல் தான்! ஆசை காதலனை கரம்பிடித்த நபர்- வைரலாகும் புகைப்படங்கள்
உலகின் பல நாடுகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
இதை அவர்களது சொந்தபந்தங்களும், நண்பர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள், சடங்குகளுடன் கோலாகலமாக திருமணமும் நடைபெறுகிறது.
அப்படி கடந்த 3ம் தேதி இந்தியாவின் கொல்கத்தாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான அபிஷேக் ராய், தனது நீண்ட நாள் ஆசை காதலரான சைதன்யா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
சென்ட்ரல் கொல்கத்தா ஹோட்டலில் முறையான பெங்காலி சடங்குகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் நண்பர்கள், சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த திருமணத்தின் மூலம், கொல்கத்தா முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் இன்னும் ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், தங்களது திருமணம் மற்ற ஜோடிகளுக்கு முன்னுதாரணமாய் விளங்கும் என மகிழ்கின்றனர் அபிஷேக் - சைதன்யா ஜோடி.
இதற்கு முன்பும் கடந்தாண்டு ஹைதராபாத்தில் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.