மாடர்ன் உடையில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம்... 47 வயதில் எப்படியிருக்காங்கனு பாருங்க
நடிகை ஜோதிகா மாடர்ன் உடையணிந்து ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக இருக்கும் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் கொண்டவர்கள். இவர்கள் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது ஜோதிகா மும்பையில் வசித்து வருகின்றார்.
நீண்ட நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன் பின்பு நல்ல கதைகளாக தெரிவு செய்து நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.
அதாவது குடும்ப கதையாகவும், கதாநாயகிக்கு முன்னுரிமை வழங்கும் கதையாக தெரிவு செய்து நடித்து வரும் நிலையில், பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

மாடர்ன் உடையில் ஜோதிகா
படங்களில் நடிப்பதை தாண்டி கணவர் சூர்யாவுடன் தயாரிப்பு வேலையிலும் ஈடுபட்டு வரும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் சிவப்பு நிற மாடர்ன் உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் ஜோதிகாவிற்கு வயதே ஆகாதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது 47 வயதாகும் ஜோதிகா தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள அதிகமாக உடற்பயிற்சி செய்து வரும் காணொளிகள் இணையத்தில் அதிகமாகவே வலம்வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |