புற்றுநோயால் மொட்டை தலை.. சிகிச்சைக்கு பணமில்லை! நடிகை வாகினியின் சோகம்
புற்றுநோயால் பாதிக்கபட்டு சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் இறந்துபோன நடிகை வாகினியின் பினன்ணி பற்றி பதிவில் பார்க்கலாம்.

நடிகை வாகினி
1972-ல் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்த ஜெயா வாஹினி தனது திரை வாழ்க்கையை ஒன்றுமில்லாத நிலையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்க சினிமாக்களில் நடித்த இவர் பின்னர் குறிப்பாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பட்டி தொட்டி உங்கும் பிரபலமானார்.
இவரின் இயற்பெயர் பத்மா விஸ்வரி. சினிமாவில் இவருடைய பெயரை பத்மா விஸ்வரி என்று மாற்றிக்கொண்டார். சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் தெலுங்கு தொடர்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்தார்.

இவருடைய 'வாசவி', 'பத்மா' போன்ற கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இன்றுவரை தங்கி உள்ளது. சின்னதிரையில் இவருக்கு கிடைத்த வலுவான வரவேற்பு தான் இவருக்கு சினிமாவில் வலுவான ஒரு வரவேற்பு இருந்தது.
சின்னத்திரையில் இவருக்கு கிடைத்த நல் வரவேற்பு அவரை தமிழ் தெலுங்கு சினிமாவரை அழைத்து சென்றது. அப்படி தான் இவருக்கு கிடைத்த வாய்புக்களில் அமைதிப்படையும் ஒன்று.
இவர் அமைதிப்படை படத்தில் மணிவண்ணனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
ஆனால் இதன் பின்னர் ஏதோ சில காரணங்களால் இவருக்கு தமிழில் பெரியளவில் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இப்படி இருக்க இவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாகினி
வாகினி கடைசியாக நடித்த படங்கள் 019ஆம் ஆண்டு வெளியான 'ரகுபதி வெங்கையா நாயுடு' வாழ்க்கை வரலாறு போன்ற படங்களாகும். அதன் பின் அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சைக்கு வருமானமும் இல்லை, கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் கடைசி காலத்தில் மிகவும் வேதனைகளை அனுபவித்து வந்த ஜெய வாகினியின் நிலைமை குறித்து அவரது தோழி ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த போட்டோவில் ஜெய வாகினி மொட்டை தலையுடன், உடல் மெலிந்து காணப்பட்டார். அந்த தகவல் இணையத்தில் பரவி பலரும் உதவிக்கரம் நீட்டுவதற்குள் ஜெய வாகினி இந்த ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி (4.2.2026) ஆண்டு உயிரிழந்தார்.
சினிமாவின் மூலம் நம்மை மகிழ்வித்த ஜெய வாகினியின் மறைவு பலரை கலங்கவைத்தது. ஜெய வாகினியின் தோழி இவரின் போட்டோவை பகிராமல் இருந்து இருந்தால் இவரின் மரணம் கூட வெளியில் தெரிந்து இருக்காது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |