நாம் தலையிட முடியாது! முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவிற்கு நடிகை கருத்து
இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு பழக்கமாக அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் விஜய். இது குறித்து நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் பேசி உள்ளார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் விஜய் நேற்று தன்னுடைய அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருந்தார். அதில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

பல வருடங்கள் முதலமைச்சராக யாரும் செய்யாத விடயத்தை முதலமைச்சர் விஜய் செய்திருக்கிறார். இந்த விடயம் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் நேற்று தலித் சமுதாயத்தை சேர்ந்த ஏழு பேரும், பெண்கள் நான்கு பேரும் அமைச்சர்களாக்கி இருக்கிறார். தற்போது புதிய மாற்றத்திற்காக தவெக கட்சிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றர். இதற்கு நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது
ஐஸ்வர்யா ராஜேஷ் விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது"அவர்கள் முடிவு எடுக்கிறார்கள். அந்த முடிவில் நாம் தலையிட முடியாது. சரியான முடிவைத்தான் எடுப்பார்கள்.
யாருக்கும் சும்மா ஒரு பதவியை கொடுத்துவிட மாட்டார். ஏதேனும் ஒரு விஷயம் இருந்தால்தான் கொடுப்பார்கள்.

நானும் உங்களை போன்றுதான் எதிர்பார்க்கிறேன். அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார். இது பொதுமக்களிடம் பேசுபொருளாக மாறி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |