திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா? இந்திரஜாவின் பதில் இதோ
இந்திரஜாவிடம் ரசிகர் ஒருவர் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர் கொடுத்த தரமான பதிலடி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இத்திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்துக்களை கூறியதோடு, சமூகவலைத்தளங்களில் இந்த ஜோடி பயங்கர ட்ரெண்டாகியுள்ளது.
மேடை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்த ரோபோ சங்கர் தற்போது தனது திறமையினால் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.
சர்ச்சையில் இந்திரஜா
ஏற்கனவே இந்திரஜாவிற்கும், கார்த்திக்குக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக உள்ளதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதற்கு இந்திரஜா சரியான விளக்கத்தை கொடுத்தார்.
அதாவது எங்கள் இருவருக்கும் 15 ஆண்டுகள் வித்தியாசம் இல்லை.. வெறும் 9 ஆண்டுகள் மட்டுமே என்று கூறினார்.
மேலும் திருமணத்தின் போது அவரது தந்தைக்கு முத்தம் கொடுத்ததும் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. என்னைப் பெற்ற தந்தைக்கு நான் முத்தம் கொடுப்பது தவறா? என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்திரஜா கணவருடன் பேட்டி கொடுக்கும் பொழுது, எனக்கு ஒருத்தர் கமெண்ட் செய்து இருந்தார். நான் அந்த நபரின் பெயரை மறந்துவிட்டேன். screenshot எடுக்க மறந்துவிட்டேன்.
அந்த நபர், "இன்னும் எத்தனை நாட்கள் ஜோடியாக பேட்டி கொடுக்குறாங்கனு பார்க்கலாம். இவர்கள் தனி தனியாக பேட்டி கொடுப்பாங்க.. சீக்கிரம் விவாகரத்து நடக்கும்" என்று அந்த நபர் கமெண்ட் செய்திருந்தார்.
என்னுடைய மாமா எனக்கு மூன்று முடிச்சி strong -ஆ போட்டு இருக்கிறார். இப்படி சொல்ல உஙக்ளுக்கு எப்படி மனசு வந்து இருக்கும் என்றும் உண்மையில் இது போன்ற விடயங்கள் எங்கள் குடும்பத்தை மனரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கின்றது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |