திருமணமாகாமல் கர்ப்பமான பிரபலம்: எமோஷனலாக இணையவாசிகளை கவர்ந்த பதிவு
திருமணமாகாமல் குழந்தை பெற்றுக் கொண்ட இலியானா குழந்தை தொடர்பாக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இலியானா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் இலியானா.
இவர் விஜயுடன் இணைந்து “நண்பன்” படத்தில் நடித்ததில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் போதியளவு கதைகள் இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.
இவர் மும்பையில் பிறந்து கோவாவில் வளர்ந்தவர். தமிழில் 2006 ஆம் ஆண்டு “கேடி” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.
உருக்கமான பதிவு
இந்த நிலையில் திருமணமாகாமல் கர்ப்பமானார். இதனால் அடுத்தடுத்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.
பின்னர் கடந்த மே மாதம் காதலரான மைக்கேல் டோலனை அறிமுகப்படுத்தி திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இலியான தன்னுடைய குழந்தை குறித்து பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ எனக்குள் ஒரு சிறிய விதையாக இருந்தவன். இப்போது அவன் என் கைகளில் தூங்குகிறான்.
இந்த விஷயங்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இலியானா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |