உடம்பில் இத்தனை தழும்புகளா? புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை வெளியிட்ட புகைப்படம்
பிரபல பாலிவுட் நடிகையான ஹினா கான் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனது உடம்பில் உள்ள தழும்புகளை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
நடிகை ஹினா கான்
பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நோயிடம் தான் போராடி வருகின்றதாகவும், விரைவில் குணமடைந்துவிடுவதாகவும் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இவரது பதிவினை அவதானித்த பல பிரபலங்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனம்.
இதில் நடிகை சமந்தாவும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
தழும்புகளின் புகைப்படம்
இந்த நிலையில் சமீபத்தில் ஹினா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்பக புற்றுநோய் காரணமாக தனக்கு ஏற்பட்ட சில தழும்புகள் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
நீங்கள் இந்த புகைப்படத்தில் எதை பார்க்கிறீர்கள், என்னுடைய உடம்பில் உள்ள தழும்புகளையா? என் கண்களில் உள்ள நம்பிக்கை ஒளிகளையா? என்று பதிவு வெளியிட்டுள்ளார்.
மேலும் குறித்த தழும்புகள் தன்னுடையவை... அதனை நான் என்றுமே வரவேற்கின்றேன். எனது முன்னேற்றத்தின் அறிகுறி அவைகள் என்றும் எனது கண்களின் நம்பிக்கை தனது ஆத்மாவின் பிரதிபலிப்பு, சுரங்கப்பாதையில் முடிவில் உள்ள ஒளியை என்னால் இனிமேல் காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவியை அவதானித்த பலரும், ஹினா கான் ஒரு தைரியமான பெண் என்றும் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |