பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குறித்து மீனா கொடுத்த க்ளு.. அப்போ இவரும் இருக்காரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2 பாகத்திலும் நடிகை ஹேமா இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் அண்ணன் - தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இதனை தொடர்ந்து சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த மாதம் சிறப்பான ஒரு டுவிஸ்டுடன் முற்றுப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கதையுடன் ஆரம்பமாகியுள்ளது.
ஹேமா நடிக்கிறாரா?
இதன் ப்ரோமோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மக்கள் அனைவரும் சீரியலை பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் ஸ்டாலினுக்கு மனைவியாக நடிகை நிரோஷாவும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதில் ஸ்டாலின் மகளாக ஹாசினி என்கிற விசாலினி நடிக்கிறார். அத்துடன் இரண்டாம் பாகத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்கிற ஹேமா நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது குறித்து கருத்து வெளியிட்ட ஹேமா,“ இது முற்றிலும் தவறான கருத்து.. நான் நடிக்க போவதில்லை.. அப்படி என்றால் நானே உங்களுக்கு கூறுவேன்..” என கூறினார்.
ஆனால் இவற்றிற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தாவணி பாவாடையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் இருக்கிறார். அத்துடன் திடீரென இப்படி ரீல்ஸ் வெளியிட என்ன காரணம்? என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் ஹீரோயின் என்றிக்கு தான் இந்த அலங்காரமா? என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |