ஹன்சிகாவுக்காக சென்னை வாசி போல மாறிய கணவர்! தீயாய் பரவும் பதிவு
ஹன்சிகா தான் வசித்து வந்த சென்னையை மிஸ் செய்வதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது..
சினிமா பயணம்
நடிகை ஹன்சிகா மோத்வானி தனுஷின் மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இவர் முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து விஜய், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார்.
ஆரம்பத்தில் சிம்புவுடன் ஹன்சிகா காதலுப்பதாகவும் பின்னர் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தாக தகவல் கசிந்தது.
ஹன்சிகா திருமணம்
இதன்படி நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்தது.
பதிவு
அவரது திருமணத்திலிருந்த புகைப்படங்களைப் அவர் பகிர்ந்து கொண்டார். அதில் “இப்போது & எப்போதும்” என்று எழுதினார்.
இதனை பார்த்த அவரது கணவர் சென்னையை வீட்டிற்கு கொண்டு வருவதாக, சென்னையின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தார்.
ஒரு வெள்ளை சட்டை, அதற்கு ஏற்ற வேஷ்டி மற்றும் அங்கவஸ்திரம் என்று தனது தோற்றத்தை மாற்றியதை, ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில் ஹன்சிகா “சென்னையை மிஸ் செய்வதால், அவர் சென்னையின் நினைவுகளை வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
தற்போது அந்த பதிவு சமூகவலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றது.