கணவருடன் பொறாமை கொள்ளும் அழகில் நடிகை ஹன்சிகா! பழமையான காரில் ஜொலிக்கும் புகைப்படம்
நடிகை ஹன்சிகா தனது காதல் கணவருடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை ஹன்சிகா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, முதலில் குழந்தை நட்சத்திரமாகவே படத்தில் அறிமுகமானார்.
பின்பு முன்னணி நடிகர்களுடன், ஹன்சிகா நடித்து பிரபலமாகிய இவர், சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகாவின் குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்துள்ளார். கடந்த 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் 450 வருடம் பழமையான மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றது.
மேலும் ஹன்சிகா தனது தோழியின் கணவரையே தற்போது திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பு புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஹன்சிகா தற்போதும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

பழமையான காரில் ஹன்சிகா
இந்நிலையில் பழமையான கார் ஒன்றில் திருமண கோலத்தில் கணவருடன் இருக்கும் வண்ணமயமான Pre Wedding போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் ஹன்சிகா & சோஹேல் நண்பர்கள் குழுவும் இந்த புகைப்படங்களில் காணப்படுகின்றனர்.



