20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீசான விஜய் படம்.. அதே உற்சாகத்துடன் ஜெனிலியா வெளியிட்ட Video
தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்த “சச்சின்” திரைப்படம், ரீ-ரிலீசு ஆகியுள்ளதால் அதனை பார்த்த ஜெனிலியா அவருடைய சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
சச்சின் திரைப்படம்
இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சச்சின்.
இந்த திரைப்படம் சுமாராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சிறப்பிக்கும் விதமாக தயாரிப்பாளர் கலை புலி தாணு, சச்சின் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளார்.
சுமாராக 20 வருடங்களுக்கு பின்னர் திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது. இதனால் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தளபதி ரசிகர்கள் மீண்டும் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதுவரையில் சச்சின் திரைப்படம் சுமார், ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காதல் மற்றும் காமெடி என படமாக்கப்பட்ட சச்சின் படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி என்ற கதாபாத்திரத்தில், நடிகை ஜெனிலியா டி சோசா நடித்திருந்தார்.
ஜெனிலியா வெளியிட்டVideo
இந்த நிலையில் தற்போது சச்சின் ரீ-ரிலீசுக்கு தளபதி விஜய் ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெனிலியா காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ வணக்கம் தளபதி ரசிகர்களே! எப்படி இருக்கீங்க? நான் உங்க ஷாலினி ஆமா, டபுள் ஐ ஷாலினி.. 20 வருஷத்துக்கு பின்னர் சச்சின் மீண்டும் தியேட்டரில் வெளியானதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சச்சின் திரைப்படத்தில் உங்க தளபதி எவ்வளவு இனிமையா இருக்காங்க என பார்க்கும் பொழுது நான் உண்மையிலேயே நெகிழ்ச்சியடைந்தேன். சச்சினை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி..” என பேசியிருக்கிறார்.
காணொளியை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் காணொளியை வைரலாக்கி வருகிறார்கள்.
தளபதி ரசிகர்களுக்கு நன்றி கூறும் @geneliad
— Kalaippuli S Thanu (@theVcreations) April 24, 2025
Thanks to our dearest Shalinii
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP #Vadivelu @iamsanthanam @bipsluvurself #ThotaTharani #VTVijayan #FEFSIVijayan @idiamondbabu @RIAZtheboss @APIfilms @dmycreationoffl @Ayngaran_offl… pic.twitter.com/oP8cse0pvv
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
