கணவரில்லாமல் உறவினர்களுடன் விசேஷம் கொண்டாடிய திவ்யா! அர்ணவிற்கு ஷாக் கொடுத்த வீடியோ காட்சி..
செவ்வந்தி சீரியல் கதாநாயகிக்கு சின்னத்திரை பிரலங்கள் மத்தியில் வெகு சிறப்பாக வளைகாப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சின்னித்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா. இவரின் யதார்த்தமான நடிப்பால் இந்தியா உட்பட தமிழர்கள் வாழும் அணைத்து பகுதியிலும் ரசிகர்களை பிடித்து வைத்திருக்கிறார்.
மேலும், இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார். அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அடித்துக் கொடுமைப்படுத்திய வீடியோ
இந்த வீடியோக்காட்சி சமூக வளைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பொலிஸார் விசாரணை வரை சென்றுள்ளது. இவரின் அழுகையும் மீடியாக்களின் எதிர்ப்பும் அதிகரித்து சென்றதால் பொலிஸார் உடனடியாக நடிகர் அர்ணவ்வை கைது செய்துள்ளார்கள்.
சில தினங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து, பின்னர் பிரச்சினை தனிந்ததும் பொலிசார் ஜாமினில் விடுவித்துள்ளனர்.தொடர்ந்து இவரும் பிரிந்து நிலையில் தான் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து வளைகாப்பு நிகழ்வை செய்துள்ளார்கள்.
இவரின் வளைகாப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை திவ்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோ பார்த்த நெட்டிசன்களும் திவ்யாவின் வளைகாப்பிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துடன், “கணவர் இல்லாமல் செய்யும் முதல் நிகழ்வு” என வருத்ததையும் தெரிவித்துள்ளார்கள்.