திவ்யாவின் வளைகாப்பில் நடந்த மற்றுமொரு வைபவம்! நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ காட்சி..
செவ்வந்தி சீரியல் நடிகையின் வளைகாப்பு நிகழ்வில் மற்றுமொரு வைபவம் இடம்பெற்றுள்ளது.
காதல் திருமணம்
செவ்வந்தி சீரியலில் நடித்த திவ்யா, சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திவ்யாவிற்கு இது இரண்டாவது திருமணமாக இருந்தாலும் காதலுக்காக மதம் மாறி வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் சமிபத்தில் திவ்யா கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் கோபமுற்று அர்ணவ் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஜாமினில் விடுதலை
இதனால் பல விசாரணைக்கு பின் அர்ணவ்வை கைது செய்த பொலிசார் தற்போது ஜாமினில் விடுவித்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் திவ்யாவிற்கு நடிகர்கள் சிலர் சேர்ந்து, அவரது பெற்றோரின் வீட்டில் வளைகாப்பு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்கள் சேர்ந்து பிரபல சினிமா நடிகையை கேலி செய்துள்ளனர். அதாவது குறித்த நடிகை காபி கொடுக்கும் போது “பொன்னு புடிச்சிருக்கு” என்று கூறி கிண்டலடித்துள்ளார்.
நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ
இந்த வீடியோ திவ்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “பொன்னு புடிச்சிருக்கு” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையவாசிகளில் பலரை ஈர்த்துள்ளது.