Adjustment இல்லன்னு பொய் சொல்லமாட்டேன்! கேமராவின் முன் உண்மையை படாரென போட்டுடைத்த பிரபலம்
சினிமாவில் இருக்கும் பெண்கள் அஜஸ்மென்ட் இல்லையென்றால் மீடியாத்துறையிலிருந்து காணாமல் ஆக்கப்படுவார்கள் என சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான தேவி பிரியா ஓபனாக கேமராவில் முன் கூறியிருக்கிறார்.
சின்னத்திரையில் செய்த சாதனை
சின்னத்திரை ஆரம்பக்காலக்கட்டங்களில் அதாவது 90ஸ் காலங்களில் “சித்தி ” என்ற சீரியலில் கல்லூரி மாணவியாக பிரபல்யமடைந்தவர் தான் நடிகை தேவி பிரியா.
இதனை தொடர்ந்து சின்னத்திரை பல சீரியல்களில் வில்லியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இவரின் வில்லத்தனமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவரின் சீரியல்களை கணக்கெடுத்து பார்த்த போது சுமார் ஐம்பது சீரியல்களை கடந்துள்ளது.
அந்தளவு பிரபலமான சின்னத்திரை நடிகையாவார், இது மட்டுமன்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ஸாகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
உண்மையை உடைத்த பிரபலம்
சமீபத்தில் வெளியான பேட்டியோன்றில் “ நீங்கள் இவ்வளவு பிரபலமாக இருக்கின்றீர்கள், ஆனால் ஏன் நீங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை” என கேட்டுள்ளார்கள்.
அதற்கு நடிகை தேவி ப்ரியா“ இது போன்று வாய்ப்புக்கள் நிறைய கிடைத்தது, ஆனால் ஒரு சிக்கல் மற்றும் தான் இருந்தது. அது என்ன தெரியுமா? “அஜஸ்மென்ட்” நான் அப்படியான நடிகையல்ல எனக்கு அது பிடிக்கவில்லை. இதனை ஒரு காரணமாக வைத்தே என்னை சிலர் விரும்பவும் இல்லை, வாய்ப்பும் கொடுக்கவில்லை” என ஓபனாக கேமராவின் முன்னர் உண்மையை போட்டுடைத்துள்ளார்.