சீரியலில் வில்லியாக தெறிக்கவிடும் சாயா சிங்: எந்த சீரியலில் எண்ட்ரி தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சாயாசிங்.
தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் சாயாசிங்.
இப்படத்தில் தனுஷ், சாயாசிங் இருவரும் நடனமாடிய ‘மன்மத ராசா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து நடிகை சாயாசிங் கடந்த 2011ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான நாகம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும் இவர் தெய்வமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
இதன்பின் கிருஷ்ணா, சாயாசிங் இருவரும் ரன் சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் சாயாசிங் இணைந்துள்ளார்.
குறித்த சீரியலில் நடிகை சாயாசிங் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். இவரது மிரட்டலான எண்ட்ரியை அவதானித்த ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் இருக்கின்றனர்.