அக்கா பேச பேச கண்கலங்கி அழுத நகுல்.. தேவயானியின் கடைசி ரியாக்ஷன்!
“நகுலுக்கு நான் அக்கா இல்லை" என தேவயானி பேசிய நகுல் உட்பட பலரை கண்கலங்க வைத்துள்ளது.
நடிகை தேவயாணி
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை தேவையானி.
இவர் திருமணத்திற்கு பின்னர் பெரியளவு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இப்படியொரு நிலையில், ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடிப்பில் வெளியாகப் போகும் திரைப்படம் தான் “வாஸ்கோடகாமா”. இந்த படத்தில், கே.எஸ். ரவிக்குமார், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிடோர் நடித்துள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படத்திற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இடம்பெற்றது.
நகுலை அழ வைத்த தேவயாணி
இந்த நிகழ்வில் தேவயானி பேசியது, நகுல் உட்பட பலரை கண்கலங்க வைத்துள்ளது.
அதில், “ நான் நகுலுக்கு அக்கா இல்லை.. நகுலுக்கு தான் ஒரு தாய் போல்..” என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இவர் இப்படி பேசுவதை கேட்ட தம்பி மேடையில் கண்கலங்கினார்.
அத்துடன் மேடையில் அமர்ந்திருந்த நகுல், தேவையானியை கட்டி அணைத்தபடி அன்பை வெளிப்படுத்தினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |