நடிகை மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய மகளா? என்ன செய்கிறார் பாருங்க- மகிழ்ச்சி தகவல்
நடிகை மஞ்சு வாரியரின் மகள் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை மஞ்சு வாரியர்
சினிமாவில் தற்போது இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மஞ்சு வாரியர்.
இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற அழகிய மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில், மஞ்சு வாரியர- திலீப்பை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனால் மகளை மஞ்சு வாரியர் வாங்கவில்லை. மீனாட்சி தந்தையுடன் இருந்து விட்டதாக தெரிகிறது.
திலீப் - நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் மீனாட்சியை திலீப் -காவ்யா மாதவன் தம்பதியுடனே வளர்த்து வந்துள்ளார்.
டாக்டர் பட்டம் வாங்கிய புகைப்படம்
வளர்ப்பு அம்மாவுடன் இருந்த மீனாட்சி சென்னையில் உள்ள தனியார் மெடிக்கல் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். இதனை புகைப்படத்துடன் காவியா மாதவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ வாழ்த்துக்கள் டாக்டர் மீனாட்சி கோபாலகிருஷ்ணன், நீ நிரூபித்து விட்டாய், உன் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தான் உன்னை இங்கு வர வைத்துள்ளது.
இன்று உன்னை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், நீ இன்னும் பல சாதனை செய்வாய் என நாங்கள் அறிவோம்.. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வாழ்த்து செய்தியை திலீப்பும் அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் பதிவு வெளியாகி நீண்ட நேரமாகியும் மஞ்சுவாரியரிடம் இருந்து ஒரு வாழ்த்து கூட வெளியானதாக தெரியவில்லை, “இது ஏன்?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |