முடிவெடுத்த அண்ணாமலை- ரோஹினியிடம் எகிறிய விஜயா- பயத்தில் மருமகள்கள்
விஜயாவின் ஏமாற்றுத்தனத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான அண்ணாமலை ஒரு தெளிவான முடிவெடுத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அம்மா- பையன் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மீனா மீது பழி போடும் விஜயா
இந்த நிலையில் மனோஜீற்காக மீனாவின் நகையை எடுத்து கொடுத்து விஜயா பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணாமலை - விஜயாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். வீட்டிலுள்ள அனைவரும் இருவரிடம் மாறி மாறி கூறுகிறார்கள்.
ஆனால் அண்ணாமலை அவர் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறார். விஜயாவின் குணத்தை மாற்றிக் கொண்டால் தான் பேசுவேன் என முத்துவிடம் கூறிவிட்டார்.
ரோஹினி , மாமாவிடம் பேசுங்கள் என கூறிய போது, விஜயா அவரிடமும் கோபமாக பேசுகிறார். மீனா தானே இந்த வீட்டின் மகாராணி அவரிடம் தானே அவர் எல்லா விடயங்களையும் கூறுகிறார். என மொத்த கோபத்தையும் மீனா மீது காட்டுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |