இப்படியும் செய்தாரா? ஸ்டோர் ரூமில் அடைக்கப்பட்ட நடிகை- கடந்த காலம் பற்றிய ஓபன்டாக்
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருக்கும் தீபிகா படுகோனின் சிறுவயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தீபிகா படுகோன்
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் தீபிகா படுகோன்.
இவர், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக மாத்திரம் ரூ.15 முதல் ரூ.20 கோடியை சம்பளமாக பெறுகிறார்.
அண்மையில் தீபிகா நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் எல்லாம் ரூ.1000 கோடி வசூலை குவித்தது.
காதல் திருமணம்
மாடலாக தன்னுடைய இலக்கை துவங்கிய தீபிகா, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய தனித்திறமையால் பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துவிட்டார். இந்தி, தமிழ் என கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.
அப்பா இப்படியும் செய்தார்..
எப்போதும் புன்னகையுடனே இருக்கும் தீபிகா அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரின் சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “நாங்கள் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், சமையலறைக்கு அருகில் நிறைய இடம் காலியாக இருக்கும். அங்கேயே ஸ்டோர் ரூம் இருக்கும். நான் என் பெற்றோரின் சொல் பேச்சு கேட்கவில்லை என்றாலோ, ஹோம்வொர்க் செய்யவில்லை என்றாலோ, அவர்கள் என்னை ஸ்டோர் ரூமில் பூட்டிவிடுவார்கள்.
அந்த அறைக்கான லைட் ஸ்விட்ச் அறைக்கு வெளியே இருக்கும். என்னை அறையில் பூட்டிவிட்டு, லைட்டை அணைத்து விடுவார்கள். மேலும், எனது வாழ்க்கையில் அப்பாவுக்கு பெரிய பங்கு உள்ளது. “நீ எது செய்தாலும், மனிதாபிமான அடிப்படையில் மக்கள் உன்னை நினைவில் கொள்வார்கள்” எனக் கூறுவார்..” என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |