புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு ஓடிப்போய் உதவிய பாலா.. அவரே வெளியிட்ட காணொளி
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணியின் மருத்துவ செலவுக்கான பணத்தை KPY பாலா கொடுத்திருக்கிறார்.
நடிகர் சுப்பிரமணி
தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சுப்பிரமணி.
இவர், திரையுலகில் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்படுகிறார்.
பரியேறும் பெருமாள், காலா, பிசாசு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட சூப்பர் குட் சுப்பிரமண, பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் அனைவரும் "சூப்பர்குட் சுப்பிரமணி" என அழைக்கிறார்கள்.
தமிழில் காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும்,ஹீரோ, மகாமுனி, கூர்கா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், கடைசியாக “பரமன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஓடிப்போய் உதவிய KPY பாலா
இந்த நிலையில் சுப்பிரமணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் நான்காம் கட்ட புற்று நோய் மற்றும் நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறார்.
இந்த செய்தி அறிந்த KPY பாலா அவரால் முடிந்த தொகையை கொடுத்திருக்கிறார். அத்துடன் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களிலும் உதவிக் கோரப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |