அடுத்த இளம் நடிகை திடீர் மரணம் - மரணத்தில் எழுந்த சர்ச்சை
கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த இளம் நடிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னட சினிமாவில் கீதா, டோரேசனி சீரியல்களில் மூலம் நடித்து பிரபலமானவர் சேத்தனா ராஜ்(21).
இவர், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கொழுப்பை குறைக்க அறிவுறுத்திய மருத்துவர்கள், அதற்கான சிகிச்சையை அவருக்கு கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் சிகிச்சையின் போது சுய நினைவை இழந்ததால், மருத்துவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
ஐசியூவில் வைத்து 45 நிமிடம் அவசர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சைக்கு பின்னர் அவர் நுரையீரலில் திரவம் சேர ஆரம்பித்ததுள்ளது.
இதனால், நேரம் கடந்த நிலையில், சேத்தனா உடல்நிலை மோசமானதால் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
மேலும், சேத்தனாவின் உடலுக்கு வேறு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடக்கவுள்ளது.
இதனால் அவர் உயிரிழக்க தவறான சிகிச்சையும், அலட்சியமுமே தங்களது மகளின் மரணத்திற்கு காரணம் என சேத்தனாவின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.