30 வயதை எட்டிய கயல் சீரியல் நடிகை! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட காணொளி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சைத்ரா ரெட்டி தனது 30 ஆவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சைத்ரா ரெட்டி
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் தான் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிவிட்டார். அதற்கு பதிலாக சைத்ரா ரெட்டி சீரியலில் அறிமுகமானார்.
முதல் சீரியல் சில மாதங்களில் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சைத்ராவிற்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான "யாரடி நீ மோகினி" சீரியல் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இந்த சீரியில் ஹீரோயினை விட வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சிக்கு தாவிய சைத்ரா தற்போது, கயல் சீரியல் மூலமாக பல குடும்பங்களில் மகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
கயல் சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் சினிமாவிலும் அஜித்துடன் "வலிமை" திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகேஷ் சமலா என்பவரை காதலித்து திருமணம் செய்க்கொண்டார். திருமணத்தின் பின்னரும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது 30 ஆவது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் வெகுவிமர்சையாக கொண்டாடியிருக்கின்றார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |