14 வயதில் சினிமாவிற்காக தடுப்பூசி ஏற்றிக் கொண்டாரா? பாக்கியலட்சுமி ஓபன் டாக்
கதாநாயகியாக வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை பாக்கியலட்சுமி தடுப்பூசி ஏற்றுக் கொண்டதாக ஓபனாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்யலட்சுமி
கண்களால் தமிழ் சினிமாவில் பலகோடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை பாக்யலட்சுமி.
இவர் 1980 களில் மலையாள நடிகைகளில் ஒருவராக விளங்கினார்.
பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாகி பாக்யஸ்ரீ என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
சினிமாவில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார். வழக்கம் போல் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலிருந்து முற்றாக விலகி விட்டார்.
பின்னர் முன்னணி கதாபாத்திரங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தடுப்பூசி பாவணையின் விளைவு
இந்த நிலையில் ஜபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதில் தான் சினிமாவிற்குள் வருவதற்காகவும், சினிமாவில் நிலைத்திருப்பதற்காகவும் நிறைய கஷ்டங்களை அனுபவித்தாக கூறினார்.
மேலும், கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய தோற்றத்தை மாற்ற 6 தடுப்பூசிகளை உடலில் செலுத்தியுள்ளதாக ஓபனாக ஒப்புக் கொண்டார்.
இளமை காலத்தில் எந்தவிதமான பாதிப்பையும் கொடுக்காத இந்த தடுப்பூசி குழந்தை பிறந்த பின்னர் ஏகப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்படி நடிகை பாக்கியலட்சுமி வாழ்க்கையில் சினிமாவிற்காக செய்த முயற்சிகளில் பல்வேறுப்பட்ட சிக்கல்களை சந்தித்துள்ளார். அவை தொடர்பில் தெளிவாக காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |