குழந்தை நட்சத்திரமாக பிரபல நடிகையின் மகள்: எவ்வளவு பெரிய பெண்ணா ஆகிட்டாங்க?
தமிழில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக 'தாமிரபரணி' படத்தில் நடித்த நடிகை முக்தா பானுவின் மகள், மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதா தகவலை பானு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ஓட்ட நயனம் என்கிற மலையாள படத்தில் அறிமுகமான பிரபல நடிகை முத்தா பானு பின்னர், தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் நடித்த இவர் பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
இந்த தம்பதிகளுக்கு கியாரா என்கிற அழகிய 5 வயது மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பானு வெளியிட்டு அந்த நிலையில், தற்போது கியாராவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.
ஆம் மம்முட்டி நடித்த ’மாமாங்கம்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார். இந்த தகவலை பானு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹீரோயின்களில் மகள்கள் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவதை தொடர்ந்து, தற்போது நடிகை பானுவின் மகளும் நடிக்க உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.