நடிகை அசின் சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க... இணையதில் உலா வரும் கியூட் புகைப்படம்
நடிகை அசினின் சிறுவயது புகைப்படமொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை அசின்
கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக புகழின் உச்சத்தில் அருந்தவர் தான் நடிகை அசின்.
இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமல்ஹாசனுடன் ’தசாவதாரம்’ என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தையொன்றும் உள்ளது. இந்நிலையில் அசினின் சிறுவயது கியூட் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்ட்டு வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |