விமர்சனம் செய்தால் செருப்பால் அடிப்பேன்! பிரபல நடிகை ஆவேசம்
தனது கணவரைப் பற்றி விமர்சனம் செய்தால் செருப்பால் அடிப்பேன் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிககை அனுசுயா பரத்வாஜ்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்திருந்தார் நடிகை அனுசுயா பரத்வாஜ்.
சின்னத்திரையில் தொகுப்பாளியான இருந்து பின்பு திரைப்படங்களில் நடிகையாக வலம் வருகின்றார். இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தினை நடிகை அனுசுயா வெளியிட்டிருந்தார்.

இதனை அவதானித்த நெட்டிசன்கள் பல விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக ஒரு நெட்டிசன் பணத்திற்காக தான் நீங்கள் இவரை திருமணம் செய்து கொண்டீர்களா என்று கேள்வி எழுப்பிய நிலையில், கடுப்பான குறித்த நடிகை, ‘பணம் அவரிடம் மட்டும் தான் உள்ளதா? என்னிடம் இல்லையா? இதை நீ சொன்னதற்காக கன்னத்தில் போட்டுக் கொள், இல்லை என்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்தார்.
மேலும், ‘மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சள் ஆகத்தான் தெரியும், பணம் மட்டுமே புத்தியை கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத் தான் தெரியும், தயவுசெய்து மாறுங்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

