நடிகை ஏமி ஜாக்சனா இது..? என்ன இப்படி இருக்காங்க? அடையாளமே தெரியல
தற்போது நடிகை ஏமி ஜாக்சனின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.
இவர் 2008ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்.
தொடர்ந்து லிவர்பூல் அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக தனது முதல் முத்திரையை பதித்தார்.
அதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளை பெற்றார்.
இந்த நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடிகை எமி ஜாக்ஷன் மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் இல்லாமல் முகம் மாறி இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |