சடலமாக மீட்கப்பட்ட நடிகை .... “எனது பயணத்தை மூழ்கடித்து” என்று வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
போஜ்புரி நடிகையான அம்ரிதா பாண்டே(27) என்பவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரிதா பாண்டே
பீகாரில் பாகல்பூரில் தனது வீட்டில் சந்தேகத்திற்கு முறையில் இறந்துகிடந்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிப்பதற்கான போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் அம்ரிதா பாண்டே மனச்சோர்வடைந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் நடிகை அம்ரிதா பாண்டேவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அனிமேஷன் இன்ஜினியர் சந்திரமணி ஜாங்கட் என்பவரை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் வசித்து வந்த நிலையில், சமீபத்தில் சகோதரியின் திருமணத்தில் குடும்பமாக கலந்து கொண்டிருந்தனர்.
இந்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
விசாரித்த போது இறப்பதற்கு முன்பு காலை 10.16 மணியளவில் ஒரு சந்தேகப்படும்படியான வாட்ஸ்அப் ஒன்றினை வைத்துள்ளார்.
குறித்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டு படகுகளில் இருந்தது. நான் எனது வாழ்க்கைப் பயணத்தை மூழ்கடித்து, அவரது பயணத்தை எளிதாக்குகின்றேன்" என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
அறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த குறித்த நடிகையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பீகார் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |