நடிகை அமலாபாலின் மகன் எப்படி வளர்ந்திட்டாங்கனு பாருங்க.. வைரலாகும் புகைப்படம்
நடிகை அமலாபால் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை அமலாபால்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால், சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு மைனா படத்தில் நடித்து தனது திறமையினை வெளிக்காட்டிய நிலையில், இப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
பின்பு பல முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்கள் நடித்து, டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். பின்பு இயக்குனர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில், விவாகரத்து செய்து இருவரும் பிரிந்தனர். பின்பு ஏ.எல்.விஜய் வேறொரு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
கொஞச வருடம் தனியாக வாழ்ந்து வந்த அமலாபால் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இலை என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டு வரும் இவர், தற்போதும் மகனுடன் உள்ள புகைப்படத்தினை பதிவிட்டு வருகின்றார்.
தற்போதும் குழந்தையுடன் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி புகைப்படத்தினை பதிவிட்டு வருகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள், குழந்தையுடன் விளையாடுவது எல்லாம் நல்ல காரியம்தான்... ஆனால் குழந்தையை வைத்துக்கொண்டு இவ்வாறு விளம்பரம் செய்வது குறித்து சற்று விமர்சித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |