163 கைவினை கலைஞர்களால் நெய்யப்பட்ட புடவையில் ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்!
இன்று நடைபெற்ற Met Gala 2024 நிகழ்ச்சியில் பல முன்னணி இந்திய பிரபலங்களும் பிரபல நடிகை அலியா பட் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜியஜின் வடிவமைப்பிலான புடவையில் கலந்துகொண்டு அசத்தினார்.
மெட்ரோபாலிடன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி தான் Met Gala.
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் வாரம் இந்த நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இடம்பெறும் இந்நிலையில் இந்தியாவில் சார்பில் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் அசத்தலான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர்
குறிப்பாக பிரபல நடிகை ஆலியா பட் ஒரு அசத்தலான புடவையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த புடவை குறித்து பேசிய நடிகை ஆலியா பட், சுமார் 163 கைவினைக் கலைஞர்கள் ஒன்றினைந்து சுமார் 1905 மணி நேரம் செலவிட்டு 79 நாட்களில் இந்த புடவையை உருவாக்கியமை குறித்து பெருமிதமாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |