குழந்தையுடன் நயன்தாரா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்... லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.
சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
குழந்தையுடன் வைரல் புகைப்படம்
நடிகையாக இருப்பதற்கு திருமணம் மற்றும் குழந்தைகள் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்து வரும் நயன்தாரா, தனது மகன்களை பார்த்து பார்த்து கவனித்து வருவதுடன், சினிமாவிலும் பிஸியாக காணப்படுகின்றார்.
இந்நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதே போன்று விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிசியான நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது பாசமிகு தாயான மாறியுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸைக் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |