விக்னேஷ் சிவன்- நயனுடன் நெருக்கமாக சம்யுக்தா: புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்
பிக்பாஸில் கலந்து கொண்ட சம்யுக்தா நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு இவ்வளவு நெருக்கமானாவரா என்று கேள்வி எழுப்பும் வண்ணம் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் கலந்துகொண்ட சம்யுக்தா, ஆரம்பத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல வெறுப்பினை சம்பாதித்தார்.
ஆம் ஆரியை பகைத்துக்கொண்டது மட்டுமின்றி அவரை வளர்ப்பு சரியில்லை, கலீஜ் என்று வார்த்தைகளை வெளியிட்டதால் அடுத்த வாரமே மக்கள் வெறுப்படைந்து அவரை வெளியேற்றினர்.
பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்பு சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவ்வாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் சம்யுக்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து திரையுலக வட்டாரங்கள் கூறியபோது, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் சம்யுக்தாவும் ஒருவர் என்றும் இந்த புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படங்கள் என்றும் கூறி வருகின்றனர்.