வருங்கால மனைவிக்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த விஷால்! வைரலாகும் காணொளி
நடிகர் விஷால் தனது வருங்கால மனைவி நடிகை சாய் தன்ஷிகாவின் பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஷல்- சாய் தன்ஷிகா
தமிழ் சினிமாவில் கவனிக்கத் தக்க நடிகர்களான நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிந்தபின் அவர்களின் திருமண திகதி முடிவு செய்யப்படடும் என விஷால் சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியான நிலையில் சாய் தன்ஷிகா தனது 36 ஆவது பிறந்தநாளை கடந்த 20 ஆம் திகதி கொண்டாடியுள்ளார்.அவருக்கு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவில் விஷால் " என் வாழ்க்கையின் ஒளி/காதலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என் வாழ்க்கையில் வந்ததற்கும், உன் வாழ்க்கை முறையால் மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும், எனக்கும் ஒரு அர்த்தத்தை கொண்டு வந்ததற்கும் நன்றி.

எப்போதும் சிரித்துக்கொண்டே உன்னுடைய பாசிடிவ்விட்டியை பகிர்ந்துகொண்டே இரு. நாம் என்றென்றும் ஒன்றாக இருக்க வழிவகுத்ததற்காக ஒவ்வொரு நிமிடமும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது." என விஷால் பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவு இணையத்தில் வைராலாகியிருந்தது.
இந்நிலையில் விஷால் தனக்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த காணொளியை சாய் தன்ஷிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |