திருமண தேதியை அறிவித்த விஷால் சாய் தன்ஷிகா ஜோடி.... வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்
நடிகை சாய் தன்ஷிகா விஷாலுடன் நடக்கும் திருமணத்திற்கான தேதியை அறிவித்துள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
சாய் தன்ஷிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் தன்ஷிகா, தான் நடித்த யோகிடா என்ற திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இப்படத்தில் முதன்மை கதாபாத்தித்தில் நடிக்கும் சாய் தன்ஷிகா, பேராண்மை, பரதேசி உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையினை வெளிக்காட்டியுள்ளார்.
யோகிடா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இத்திரைப்படத்தில் சாய்தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார்.
இதனை தற்கொலை என்று மாற்ற முயற்சிக்கும் கும்பலிடம், கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்வதும், இதனால் அவர் கடந்துவரும் பின்விளைவுகள் பற்றிய கதையே யோகிடா படமாகும்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, நடிகர் விஷால், இயக்குனர் சங்க தலைவர் RV உதயகுமார், பேரரசு, மித்ரன் R ஜவஹர், மீரா கதிரவன் ஆகியோருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இயக்குனர் உதயகுமார், ராதாரவி இவர்கள் பேசுகையில் விஷால், சாய்தன்ஷிகாவை வாழ்த்தி பேசியுள்ளனர்.
திருமண தேதியை அறிவிப்பு
நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில், தனது 17 வருட உழைப்பு குறித்தும், தற்போது யோகிடா படத்தில் நடித்ததையும் குறித்தும் பேசினார்.
மேலும் 15-ஆண்டுகளுக்கும் மேலாக விஷால் அவர்களைத் தெரியும். நானும் அவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.
ஊடகத்தினர் அனைவரும் எங்களை வாழ்த்த வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் பேசுகையில், 'யோகிடா' திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படம் வெற்றியடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
சாய் தன்ஷிகாவும் நானும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பை தொடர்வார் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
