விஷால் செய்த சங்க பணத்தின் மோசடி: புதிய படங்கள் இயக்க தடை விதிதுள்ள தயாரிப்பாளர் சங்கம் !
நடிகா விஷால் நடிகர் சங்க பணத்தை மோசடி செய்ததன் காரணமாக தற்போது தயாரிப்பளர் சங்கம் விஷால் நடிக்கும் அடுத்த படங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஷால்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 2017 முதல் 2019 ம் ஆண்டு வரை தலைவராக இருந்த நடிகர் விஷால் சங்க நிதியை முறைகேடாக செலவழித்துள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தினால் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் பிறப்பில் தெலுங்காக இருந்தாலும் இவர் அறிமுகமானது தமிழ் படங்களின் மூலம் தான். இவர் கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர்.
இதனால் நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார். இது தவிர அரசியலிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
குறிப்பிட்ட காலம் வரை ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக இருந்து வந்த விஷால் தற்போது தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
குறிப்பாக சமீபத்தில் வெளியான இவரின் ரத்னம் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இருந்து தற்போது வரை விஷால் செய்யும் ஒவ்வொரு செயலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த போது சங்கத்தின் நிதியை பொறுப்பேற்றார். அப்போது அந்த நிதியில் 12 கோடி ரூபாய் விஷால் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் இது குறித்து விசாரணையும் விஷாலை வைத்து நடைபெற்றது.
இது குறித்து பதிலளிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கூறியதுடன் இதுவரையில் விஷால் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததால் புதிதான கோரிக்கை தயாரிப்பார் சங்கம் விடுத்துள்ளது.
அந்த கோரிக்கையின் படி விஷால் நடிப்பில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை செய்த பிறகே, பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிக்கையின் காரணமாக விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டிற்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். அதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்புநிதியை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழுவினரின் அனுமதி பெற்றே, சங்க உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு மற்றும் பென்சன் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்பட்டது.
வைப்புத்தொகையை பயன்படுத்தலாம் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்திட்ட பிறகே, நலத்திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது என கூறியுள்ளார். தற்போது நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் கோரிக்கையை எப்படி கையாளப்போகிறார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |