நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ராந்த் மாஸ்ஸி- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த விக்ராந்த் மாஸ்ஸின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி
விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் 12வது ஃபெயில் (12th Fail). இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி நடித்த கதாபாத்திரம் கதைக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பல தடைகளை கடந்து தனது திறமையின் மூலம் பலரது மனதில் இடம் பிடித்துள்ள விக்ராந்த், சினிமாவை விட்டு விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
குறித்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அவரது கடைசி படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், நடிகர் விக்ராந்த் மாஸ்ஸின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிடம் மொத்த சொத்து மதிப்பு 20- 25 கோடி ரூபா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இவர் ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக 1 முதல் 2 கோடி ரூபாய் வாங்குகிறார். இவர் சொகுசு காரான வோல்வோ எஸ் 90 மதிப்பு 60.4 லட்சமாகும். 12 லட்ச மதிப்புள்ள டுகாட்டி மான்ஸ்டர் பைக் ஒன்றை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |