கிளிக்கு கூட ஆங்கிலம் தான் கற்றுக்கொடுக்கனுமா? நடிகர் விக்ரமை விளாசும் நெட்டிசன்கள்
நடிகர் விக்ரம் தான் வளர்க்கும் கிளியிடம் ஆங்கிலத்தில் பேசியுள்ள நிலையில், கிளியும் அதற்கு ஏற்ப தனது பதிலைக் கொடுத்து அசத்தியுள்ளது.
விக்ரம் வீட்டில் கிளி
தமிழ்நாட்டில் கிளி அழிந்துவரும் பறவையாக இருந்துவருவதால், அதனை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அதாவது வீடுகளில் கிளிகளை வளர்க்கக்கூடாது என்று கூறி அதனை காப்பாகத்தில் விடுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான நபர்கள் தாங்கள் வளர்த்த கிளியை காப்பகத்தில் விட்டுள்ளனர்.

இதில் நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தினரும் உண்டு. தான் ஆசையாக வளர்த்த கிளியை பிரிய மனமில்லாமல் அவர்கள் பல நாட்களாக தவித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் வீட்டில் கிளி ஒன்றினை வளர்த்து அதற்கு பேசவும் கற்றுக்கொடுத்துள்ளார். அந்த கிளியும் விக்ரம் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அட்டகாசமாக பதிலளித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |