குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
பொதுவாக, மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில் குறைந்த விலையிலும், அதிக சத்துக்கள் நிறைந்த பவளப்பாறை மீன் குறித்து பார்க்கலாம்.
பவளப்பாறைகளில் வளரும் பாசிகளை இந்த மீன்கள் உணவாக உட்கொள்வதனால் பவளப்பாறைகள் ஆரோக்கியமாக வளர உதவுகின்றன.

இந்த மீன்களில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், டிரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும், மூட்டுவலி அறிகுறிகளைக் குறைக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
குறிப்பாக இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
மேலும், இந்த மீன்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

அதேபோல், இதில் உள்ள குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு புரதம் இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
பவளப்பாறை மீன்களில் உள்ள அத்தியாவசிய கொழுப்புச் சத்துக்கள் மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
மேலும், இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.