33 வருட சினிமா வாழ்க்கையில் சம்பாதித்தது என்ன? வெளியானது நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு விபரம்
தற்போது இணையத்தில் பல பிரபலங்களில் சொத்து மதிப்பு விபரம் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு விபரம் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சியாம் விக்ரம் சினிமாவிற்காக 33 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்திருக்கிறார். இவர் சேது திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று வரைக்கும் பலரது மக்கள் மனதிலும் ஒரு இடத்தைப் பிடத்துக் கொண்டார்.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியும் இருக்கிறார். அதுமட்டுமில்லாது பாடலும் பாடியிருக்கிறார்.
சொத்து மதிப்பு
உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்திருப்பேன்... அப்பவே வனிதாவிற்கு ரூட்டு விட்ட பிரதீப்: வைரலாகும் வீடியோ காட்சி
நடிகர் விக்ரமிற்கு தற்போது 57 வயதாகின்ற நிலையில் 33 ஆண்டுகளாக சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது நடிக்கும் படங்களுக்கு 25 கோடியிலிருந்து 35 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார். மேலும், இவருக்கு சென்னையில் சொந்தமாக ஒரு வீடும் இருக்கிறது. அந்த வீட்டிலேயே ஜிம் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறாராம்.
இவர் அதீத கார் பிரியர் என்பதால் 5இற்கும் மேல் சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கார். அப்படி இப்படி எப்படி பார்த்தாலும் இவரின் மொத்த சொத்து மதிப்பானது கிட்டதட்ட 150 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |