நடிகையுடன் தொடர்பு... விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா மனு தாக்கல்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.
இந்த வழக்கு வரும் மார்ச் 20ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. அப்போது விஜய்யும் சங்கீதாவும் ஆஜராவார்கள் என தெரிவிக்கப்டுகின்றது.

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |