கையில் குழந்தையுடன் விஜயகுமார் பேத்தி! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. தற்போது லண்டனில் வசித்து வரும் தியா கையில் குழந்தையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார்.

இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.
நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனிதாவிற்கு, தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில், விஜயகுமாரின் பேத்தி தியா அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு, தியாவுக்கு தில்லா என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பல நடிகர்கள் கலந்து கொண்டனர். தற்போது லண்டனில் செட்டிலாகி இருக்கும் தியா அண்மையில் புதிதாக வீடு வாங்கி கிரபிரவேஷம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் கையில் குழந்தையும் தியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இது யாருடைய குழந்தை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |